Agathiyar Arudam APP
இந்த யந்திரத்தின் அமைப்பு மிகவும் எளிமையானதாகும். எட்டுக்கு எட்டு அளவிலான சதுரத்தில் 64 கட்டங்களாக பிரிக்கப் பட்ட எளிய அமைப்புடையது. இந்த கட்டங்கள் முழுவதும் எண்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும். பெரிதான சிக்கலோ, சிரமமோ இல்லாத எளிய ஆரூட முறை இது.
இந்த யந்திரத்தை வைத்து எப்படி ஆரூடம் பார்ப்பது?
ஆரூட யந்திரத்தை தங்களின் இஷ்ட தெய்வத்தின் முன்னர் வைத்து வணங்கிய பின்னர், குருவருளை மனதில் தியானித்து தனது தேவைகளை மனதில் நினைத்து யந்திரத்தில் உள்ள எண்களில் ஏதேனும் ஒன்றினை தொட வேண்டும். அந்த எண்ணைக் குறித்துக் கொண்டு பின்னர் அந்த குறிப்பிட்ட எண்ணுக்கு அகத்தியர் அருளிய பாடலைப் படித்து பலனை அறிய வேண்டும்.
இதே முறையில் மற்றவர்களுக்கும் செய்யலாம். கண்களை மூடி இஷ்ட தெய்வத்தை வணங்கி, பிரச்சினைகளை மனதில் நினைத்துக் கொண்டு ஏதேனும் ஒரு எண்ணை தொடச்சொல்லி பலன் சொல்லலாம். சிலர் மணதில் ஒரு எண்ணை நினைத்து அதைக் கூறும்படிக் கூறி அதற்கு பலன் சொல்வதுமுண்டு.
************************************************** ************************************************** ****
Mọi góp ý, phản hồi và khiếu nại. xin vui lòng liên hệ: happyendnet11@yahoo.co.in
************************************************** ************************************************** ****